இன்றைய நாட்களில் எல்லோரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் எப்பொழுது குடிக்க வேண்டும் என்று பலவிதமான குழப்பங்கள் உள்ளது.
ஆகையால் ஒரு சிலர் தண்ணீரினை ஒரேடியாக நிறைய குடித்து விடுகிறார்கள். வேறு சிலர் தண்ணீரையே குடிப்பதில்லை மற்றும் குறைந்த அளவே தண்ணீர் பருகுகின்றனர்.
இம்மாதிரியான செயல்களால் நம் வயிற்றில் உள்ள ஜடராக்னிக்கு பங்கம் விளையும். அப்படியென்றால் நீரின் அளவை பொருத்தே நம் வயிற்றில் உள்ள அக்னியின் தன்மை இருக்கும். ஏன் அவ்வக்னியை பேணுதல் அவசியம்?
நாம் என்ன உணவு உண்டாலும், திரவமாக உட்கொண்டாலும், மருந்து, மாத்திரை போன்ற என்ன உட்கொண்டாலும் வயிற்றில் சென்று ஜீரணமாகிய பின்பு மற்ற தாதுக்களாக பரிணாமம் எடுக்கும். ஆகவே தான் அக்னி மிகவும் முக்கியம்.
நம் பள்ளி பருவங்களில் எல்லாரும் chemistry labல் ஏதாவது ஒரு acid எடுத்து தண்ணீர் ஊற்றி தான் dilute (திரவத்துவம்) செய்வோம். அதுபோல நம் வயிற்றில் உள்ள HCl அமிலத்தன்மையுடையது. அவ்வாறு இருக்கையில் அதை பேணிக்காத்தல் அவசியம்.
ஆகவே காலை எழுந்தவுடன், பல் துளக்கியதும் சிறிதளவு (ie. 1/2 tubler (100ml)) தண்ணீர் குடிக்கவும். நம் உடலே நமக்கு ஆணையிடும் போது மேலும் தேவையா என்று, அவ்வாணையினை அனுசரித்தல் அவசியம்.
சிலருக்கு 1 Ltr - 1.5ltr தண்ணீர் குடித்து பழக்கம் இருந்தால், அதையே இடைவெளி விட்டு பிரித்து குடிப்பது சாலச் சிறந்தது.
அவ்வாறு செய்கையில் வயிற்றிலுள்ள அக்னி ரக்ஷிக்கப்படும்.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்?
💧 100ml அளவு தண்ணீர் பலதடவை 5 நிமிட இடைவெளியில் கூட குடிக்கலாம்.💧 உணவு அருந்துமுன் தண்ணீர் குடிக்க கூடாது என்ற கூற்று உள்ளது. உணவு அருந்தும் முன் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.
💧 உணவு உண்ணும் போதும் சிறிதளவு பருகலாம். உணவு உண்டு முடித்தவுடன் சிறிதளவே பருக வேண்டும்.
💧 உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிக்கலாம் என்று கூறியதற்காக நிறையவும் குடித்தல் கூடாது. அவ்வாறு செய்தால் உண்ட உணவு ஜீரணமாகாது.
💧 வெளியில் செல்லும் போது சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு செல்லவும்.
💧 வீட்டிற்கு வந்தவுடன் கை கால் சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் பருகுதல் அவசியம். ஏனென்றால் நம் உடலில் தட்ப வெப்ப நிலையினை சமன் படுத்தி நம் உடலின் செயல்களை சீர் செய்யும். ஆகையால் தான், நம் வீட்டிற்கு யார் வந்தாலும், வந்தவுடன் ஓர் குவளையில் தண்ணீர் தரும் வழக்கமுள்ளது.
💧 உறங்குவதற்கு முன்னும் சிறிதளவு தண்ணீர் அருந்தி உறங்க சென்றால் நன்றாக தூக்கம் வரும். அதுபோல் நம் முன்னோர்கள் படுக்கை அறையில் இரவு வேலையில் தண்ணீர் வைத்துக் கொள்வர். பித்தம் அதிகமானால் இரவு பொழுதில் (சுமார் 2-3 மணி அளவில்) முழிப்பு வந்து விடும். பின்பு உறக்கம் வருவது கடினம். அவ்வேளையில் கை, கால் சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் குடித்து படுத்துக் கொண்டால் பித்தம் குறைந்து நன்றாக உறக்கம் வரும்.
💧 முக்கியமாக பெண்கள் அடுப்பறையில் நின்று சமைக்கும் போது அடுப்பின் உஷ்ணத்தினால் உடலிலும் உஷ்ணம் அதிகரிக்கும். ஆகவே பெண்கள் சமையல் செய்யும் போது அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
இக்கால சமையல் அறை மிகவும் சிறியதாக உள்ளது. ஆகவே, காற்றோட்டம் குறைவினால் அதிக வியர்வை வெளிப்படும். அதை சமன் செய்யவும் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம்.
குளிர் சாதன பெட்டியில் (Fridge) வைத்த தண்ணீரை குடிக்கக் கூடாது.
தண்ணீரினை லேசாக சுட வைத்து குடிக்கலாம்.
தண்ணீரின் தாதுக்கள்
இன்றைய கால கட்டத்தில் நாம் எல்லோரும் RO போன்ற filter-களை பயன்படுத்துகிறோம். எல்லாவிதமான mineral களும் filter செய்து வெறும் தண்ணீரையே தருகிறது. வேறு வழியில்லாமல் அதைத்தான் நாம் குடிக்க வேண்டும்.
ஆனால் நாம் அந்த minerals-களை திருப்பி தண்ணீரில் வர வழிவகுக்கலாம். எவ்வாறென்றால் வெள்ளி டம்பளரில் தண்ணீரினை வைத்து குடித்தால் எல்லாவித அத்தியாவசிய minerals ம் கிடைக்கும்.
இறைவனுக்கு தண்ணீர் தேவையென்று நம் வீட்டில் ஓர் வெள்ளி பாத்திரத்தில்/சொம்பு /டம்பளர் தண்ணீர் வைப்பர். மறுநாள் அதை குடித்து விட்டு பிறகு புதிதாக தண்ணீர் வைப்பர். இச்செயலுக்கு இதுவே காரணம்.
இவ்வாறு செய்தால் நம் உடல் சூடு தணியும். எல்லாவிதமான தாதுக்களும் நன்றாக இருக்கும், ஆரோக்கியம் கிட்டும், செயல் திறன் கூடும்.
இவ்வாறு ஐம்பெரும் பூதங்களாகிய நீரினை நம் உடலில் பேணி காத்து, நம் உடலையும் காத்து ரக்ஷிப்போமாக !!
மேலும் சந்தேகங்களுக்கு,
Mobile : 98415 82688
0 Comments