தரித்திரம்!

நகம் கடித்தால் தரித்திரம் ஏன்?

வீட்டில் தலைமுடி இருந்தால் தரித்திரம் ஏன்?

srustidesign.blogspot.com - Nail clipping


வாரம் ஒருமுறை கை நகம் வெட்டுதல் வேண்டும். 

இரு வாரத்திற்கு ஒருமுறை கால் நகம் வெட்டுதல் வேண்டும். 


srustidesign.blogspot.com - Nail clipping


நம் தேகமானது சப்த தாதுக்களால் ஆனது. ஆயுர்வேதத்தில் சப்த தாது என்பது ரச,ரக்த,மாம்சம், மேத்ஸ்,அஸ்தி,மஜ்ஜா, சுக்ரன் ஆகும். அதில் எலும்பின் கிட்ட பகுதியே நகம், தலைமுடி. 

srustidesign.blogspot.com-Saptha Dhatu



நாம் உண்ணும் உணவின் பரிணாமம் ஒழுங்காக நடந்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆரோகியமான தேகம், மனம் பெறலாம். 

அதிகமாக தலைமுடி உதிர்ந்தாலோ, வளர்ச்சியில்லாமல் இருந்தாலோ எலும்பின் பரிணாமம் சரியில்லை என்று தெரிந்து கொள்ளலாம். சரியாக இருந்தால் நகத்தின் வளர்ச்சி சரியாக இருக்கும். 


srustidesign.blogspot.com - Nail biting

ஒரு வாரத்திற்குள் நாமாகவே வெட்டும் சூழ்நிலை உருவாகும். அவ்வாறு இல்லையென்றால் நகத்தின் தன்மை குன்றிகாணப்படும். நமக்கு கடித்து எடுக்க தோன்றும். 

இவ்வாறான நிலையில் உடலை சீர் செய்ய மருந்து உட்கொள்ளுதல் அவசியம். ஆகவே மருத்துவச்செலவு ஏற்படுதல் என்பது தரித்திரம் என்று கருதப்படுகிறது. முடி உதிர்தல் என்பதும் அவ்வாறே.

இன்று Thyroid, PCOD, ரத்தசோகை, diabetes போன்ற பல்வேறு வியாதிகளுக்கு முதற்காரணம் வயிற்றில் உள்ள அக்னி. நம் ஜடராக்னியை பேணி காத்தால் எவ்வித ரோகமும் வராது என்பது தின்னம்.


srustidesign.blogspot.com - diseses

அதற்காகவே நம் முன்னோர்கள் பலவித கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளனர். அவற்றை பின்பற்றி நலமோடு வாழ்வோம்!

மேலும் சந்தேகங்களுக்கு,
Dr. C. Bala thripurasundari, B.A,M.S.,
Ayurvedic Consultant
Chennai.
Mobile : 98415 82688

Post a Comment

0 Comments