எளிதில் பலன் தரும் எலுமிச்சை!

எலுமிச்சை - Lemon - जम्बीरं 


सेचनो दीपनस्तीक्ष्ण: सुगन्धिमुखशोधनः |
जम्बीरः कफवतह्न: क्रिमिघ्नो भाक्तपाचनः || (च.सू - 27)

எலுமிச்சை, நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் போன்றவை ஒரே வகையை சேர்ந்தது. இதில் அமிலத்தன்மை முறையே குறைந்து காணப்படுகிறது.  இதன் குணங்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே காணப்படுகிறது.

✓ எலுமிச்சை கப, வாயுவை குறைக்கும்.

✓ உண்ட உணவினை எளிதில் ஜீரணமாக்கும்.

✓ பசியை நன்கு தூண்டும்.

✓ பாக்டீரியா, வைரஸ், Algae, Fungus போன்ற நுண்கிருமிகளை அழிக்கும்.

✓ எவ்விடத்தில் பட்டாலும் அது அரிக்கும் தன்மையால் முற்றிலுமாக சுத்தம் செய்து விடும்.  

இது கபத்தைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது, அப்படியென்றால் சளி தொந்தரவு இருக்கும் போது இதை எடுத்துக் கொள்ளலாமா?

சளி தொந்தரவின் ஆரம்ப நிலையில் கபம் அதிகமாக இல்லாமல், உஷ்ணமும் வாயுவும் அதிகரித்த நிலையில் இதனை பயன்படுத்தலாம். கபம் அதிகரித்த நிலையில் பயன்படுத்துதல் பயனளிக்காது. ஏனென்றால் இயற்கையாகவே எலுமிச்சை குளிர்ச்சி தன்மை உடையது. இதன் குணங்கள் மாறுபட்ட நிலையில் காணப்படுவதால் இவ்வேறுபாடுகளைக் காண்கின்றோம்.

ஆகையால் தான் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்தும், பானகத்தில் எலுமிச்சை சாறும், எலுமிச்சை ரசமும், vegetable salad - ல் எலுமிச்சை பழச் சாறும் பயன்படுத்துகின்றோம். தலைக்கு எலுமிச்சை தடவிக்கொண்டால் உடல் உஷ்ணம் தணியும், பொடுகு குறையும். தோலில் தடவிக்கொண்டால் நன்றாக வெளுக்கும். அதிகமாக கோபப்பட்டால் "பித்தம் தலைக்கு ஏறிடுத்து, எலுமிச்சைபழத்தினை நன்றாக தேய்த்துக் குளி என்பர். ஆகவே எலுமிச்சையினை முறையாக பயன்படுத்தி பயனடைந்து ஆரோக்ய வாழ்விற்கு வித்திடுவோம்.

மேலும் சந்தேகங்களுக்கு,
Dr. C. Bala thripurasundari, B.A,M.S.,
Ayurvedic Consultant
Chennai.

Mobile : 98415 82688

Post a Comment

0 Comments