ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்
எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.
ஏகாதசி துவாதசியின் உணவு முறைகள்
ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.
ஏகாதசி அன்று உபவாசம் என்பது அனைவருக்கும் பொதுவானது. யுக மாற்றத்தினால் மனிதர்கள் தேகபலம், மனோபலத்திற்கு ஏற்ப அவரவர் உபவாசம் இருப்பது முக்கியம்.
ஆகவே ஏகாதசி அன்று,
➡ உத்தம தேக பலம் - பால், பழம், நீர்
➡ மத்யம தேக பலம் - 1 வேலை உப்பு இல்லா பண்டம்
(சப்பாத்தி, அவல், பயத்தம் கஞ்சி)
➡ அதம தேக பலம் - அரிசி உப்புமா
ஆனால் சுத்த பட்டினி என்று நிர்ஜலமாக இருத்தல் ஆகாது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறையால் வாயு பித்தம் அதிகரிக்கும். ஆகவே தான் உட்க்கொள்ளும் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
நெய் உடலிலுள்ள வாயு பித்தத்தை குறைக்கும், போஷணம் அளிக்கும்.
மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
துவாதசி பாரணையின் முக்கியத்துவம்
துவாதசியன்று நம் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்து உணவு உட்கொள்ளுதல் அவசியம்.
என்னென்ன பொருட்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்?
* நெல்லிக்காய், அகத்திக்கீரை, எலுமிச்சைப்பழம், பச்சை காய்கறிகள் சேர்த்தல் வேண்டும்.
* புளி சேர்க்காமல் சமைத்தல் வேண்டும்.
* புளி வாயு, பித்தம் இரண்டையும் அதிகரிக்கும்.
* எல்லா காய்கறிகளும் சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிட்டால் வாயு குறையும்.
கூட்டிற்கு அரைத்துவிடும் பொருட்களின் சேர்க்கை :
மிளகு, பெருங்காயம் - வாயுவை குறைக்கும்.
தேங்காய் - உடலுக்கு போஷணம் அளிக்கும்.
நெல்லிக்காய் - எல்லா தோஷங்களும் தனிக்கும் ரசாயனமாகும்.
சுண்டைக்காய் - வாயுவை குறைத்து ஜெரிமான சக்தியை அதிகரிக்கும்.
அகத்திக்கீரை - சிறிதளவே உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால் வாயு அதிகரிக்கும்.
இவ்வாறு துவாதசி பாரணை செய்தல் அவசியம்.
மேலும் சந்தேகங்களுக்கு,
Mobile : 98415 82688
0 Comments