अभ्यङ्गं = अभि + अङ्गम्
अभि - Glow अङ्गं - Body parts
நமது வழக்கத்தில் ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்தல் அவசியம் என்று நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்துள்ளனர்.
* வாரம் இருமுறை - எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
* ஆறு மாதம் ஒருமுறை - ஆமணக்கு (Castor Oil) குடித்தல் வேண்டும்.
இவ்வாறாக உடலில் நெய்ப்புத்தன்மையை எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ளவே வகுத்துள்ளனர்.
अभ्यन्गमाचरेत्नित्यं ...
எண்ணெய் தேய்த்து குளித்தல் அவசியம். அதனால் என்ன பயன் என்று கீழ்கண்ட ஸ்லோகத்தின் மூலம் அறியலாம்.
.... स जराश्रमवातहा: |दृष्टि, प्रसादायु: स्वप्नसुखत्वदाढर्यकृच |
என்றால்* நரை, சிரமத்தினை போக்கும்.
* வாயுவைக் குறைக்கும்.
* கண் நன்றாக தெரியும்.
* ஆயுள் விருத்தியாகும்.
* நன்றாக தூக்கம் வரும்.
* உடல் வலிமை பெறும்.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எவ்வாறு ஒரு இயந்திரத்திற்கு எண்ணெய் இட்ட பிறகு நன்றாக இயங்குமோ அவ்வாறு உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடலில் உள்ள உறுப்புகளும் நன்றாக இயங்கும்.
"வைத்தியனுக்கு கொடுப்பதற்கு பதில்
வாணியனுக்கு கொடுக்கலாம்"
என்ற வாக்கியம் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் சிறப்பை எடுத்துரைக்கிறது.
வாணியர் தயாரிக்கின்ற, பலவகையான எண்ணெய்களை, முறையாக, அளவாக, உடலைத் தேற்றவும், உடல்நோய்களை நீக்கவும், வெளிப்புறப் பூச்சாகவும், உள்ளே உட்கொள்ளும் உணவுப்பொருளாகவும் பயன்படுத்தி வந்தால், பல நோய்கள் வராமலே தடுக்க முடியும்; பல சிறு நோய்கள் வந்தாலும் குணமாக்க முடியும். (உதாரணம்: நல்லெண்ணெய்க் குளியல்)
ஆகையால் தான் நாம் எல்லா பண்டிகைக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம். இதில் முக்கியமாக இப்பொழுதும் நம் வழக்கத்திலிருந்து மாறாமல் இருப்பது, தீபாவளியன்று எண்ணெய் குளியல் எடுப்பது ஆகும்.
எண்ணெய் தேய்த்து குளித்த அன்று மதியம் உறங்குதல் கூடாது. ஏனென்றால் மதியம் உறங்கினால் கபம் அதிகமாகும். எண்ணெய் தேய்த்து குளித்ததால் வாயு குறைந்து உடலில் கபம் அதிகரிக்கும். (இங்கு கபம் என்றால் இன்று வழக்கத்தில் உள்ள சளி கிடையாது. உ.தா:- உடலில் நெய்ப்புத்தன்மை அதிகரிக்கும் (Moistness) ஆகையால் உடல் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.)
யாராவது ஏன் என்று யோசித்ததுண்டா?
ஏனென்றால் தீபாவளி வரும் காலம் - குளிர்காலம் - ஹேமந்த ரிது - Winter Season (from மிட் October to Mid December)
இக்காலம் மிகவும் குளிர்ந்து காணப்படும். ஆகையால் உடலில் உஷ்ணம் அதிகரித்து நன்றாக பசிக்கும், ஆனால் அக்காலத்தில் அகாலமாகவோ நெறியில்லாமலோ உணவு உட்கொண்டால், ஜீரண கோளாறு ஏற்பட்டு வாயு அதிகரித்து பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். ஆகவே உள்ளும் புறமும் அக்காலத்திற்கு என்று குறிப்பிட்டுள்ள உணவினை உட்கொண்டு, வெளிப்பூச்சுகள் பூசிக்கொண்டு உடலினை பேணுதல் அவசியம்.
எண்ணெய் தேய்த்து குளித்தால் வாயு குறையும். அதிலும் நல்லெண்ணெயினை மிளகு, ஜீரகம், வெந்தயம் எல்லாம் சிறிதளவு எடுத்து எண்ணையில் போட்டு லேசாக பொரியும் வரை சூடு செய்வர். ஆகவே அந்த எண்ணையானது மூன்று தோஷங்களையும் (வாயு, பித்தம், கபம்) சமன் செய்கிறது. அன்று சதுர்த்தசி திதி இருக்கும்போது தான் குளிக்க வேண்டும் என்று கூறுவார்.
சதுர்த்தசி - ரிக்த திதி ஆகும். ரிக்தம் என்றால் வெற்றிடம்.
எல்லா வெற்றிடத்திலும் வாயுவானது நிரம்பியிருக்கும். ஆகவே நெய்ப்புத் தன்மையான எண்ணெய் அவ்வாயுவை குறைக்கும்.
எண்ணெய் குளியலின் பயன்கள்:
வெயில் காலம்* உடல் சூட்டை தணிக்கும்.
* வாயுவைக் குறைக்கும்.
* தோலிற்கு வெயிலை தாங்கும் தன்மையை அளிக்கும்.
* உடலில் மிருது, மென்மை தன்மையை அதிகரிக்கும்.
* உடலினுள் சென்று உடலுறுப்புகளை உறுதியாக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.
குளிர்காலம்
* உடலிற்கு உஷ்ணத்தை அளிக்கும்.
* ஜீரண சக்தியை சரி செய்யும்.
* புத்துணர்ச்சி தரும்.
* பித்தம், வாயு, கபம் - மூன்று தோஷங்களை சமன்படுத்தும்.
* சளி, சுவாசக்கோளாறு போன்ற வியாதிகளிலிருந்து விடுபடலாம்.
* எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து அக்காலத்தில் ஏற்படும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்று கூறி நம்மை செய்ய வைத்தார்கள். ஆனால் அதன் பின் மிகப்பெரிய விஞ்ஞானம் உள்ளது என்று இன்றைய தலைமுறையினரின் சிற்றறிவிற்கு எட்டுவதில்லை. இனிமேலாவது அவற்றைப் பின்பற்றி நாம் நம் வாழ்வில் மேன்மை அடைவோம்...
மேலும் சந்தேகங்களுக்கு,
Mobile : 98415 82688
0 Comments