வாழ்க்கையின் மூன்று ஆதாரங்கள்

✦ உணவு  - आहारः 
✦ தூக்கம் - स्वप्नः 
✦ புணர்ச்சி / புணர்ச்சியின்மை - ब्रह्मचर्य: 
ஆகியவையே வாழ்வின் ஆதாரங்களாகும்.

srustidesign.blogspot.com - Life Essentials


त्रय: उपस्तंभाः इति - आहारः स्वप्नः ब्रह्मचर्य इति ||

மனிதன் இம்மூன்றினையும் முறையாக பின்பற்றினால் உடல் பலம், பொலிவு, வளர்ச்சி, ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.

आहारः - உணவு  - Food 

"உணவே மருந்து" என்ற கூற்றின்படி, உணவு முதலாவதாக கூறப்பட்டுள்ளது. நம் வாழ்வில் மிக முக்கியமானது உணவு. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தர்ம வழியிலோ, அதர்ம வழியிலோ உணவிற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு தான் அடிப்படை. ஆகையால் தான் பலவிதமான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

ஆரோக்கியமான உணவு என்று நம் முன்னோர்கள் சிலவற்றை கூறியுள்ளனர். அவையாவன:
✤ சிவப்பு அரிசி 
✤ கருப்பு உளுந்து 
✤ பயறு 
✤ மழை நீர் (பூமியில் விழாத)
✤ இந்துப்பு 
✤ நெல்லிக்காய் 
✤ தேன் 
✤ பசுநெய் 
✤ பசும்பால் 
✤ நல்லெண்ணெய் 
✤ இஞ்சி 
✤ திராட்சை 
✤ சர்க்கரை (கரும்பிலிருந்து தயாரித்தவை) 
✤ மனத்தக்காளி கீரை 

இது எல்லா தேசத்திற்கும் பொருந்தும். உணவின் தன்மை, சில பொருட்களின் சேர்க்கை, பிரித்தல், சமைத்தல், வடிகட்டுதல், பக்குவம் போன்ற பலவித செய்முறைகளால் மாறுபடுகிறது. இவ்வாறு பின்பற்றுதலின் மூலம் நாம் எல்லா பாவங்களிலிருந்தும், ரோகங்களிலிருந்தும் விடுபடலாம். 

 स्वप्नः  - தூக்கம் - Sleep 

निद्रायत्तं सुखं दुःखं आयुः तस्यबला बलं |

- இன்பம், துன்பம், ஆயுள், ஆரோக்கியம், தேகபலம், மனோபலம் ஆகிய அனைத்துமே நம் தூக்கத்தினை பொறுத்தது.

रात्रि जागरणं   - இரவில் விழித்திருத்தல் - Keeping awake at night 
- இரவில் கண் விழித்திருப்பதால் உடலில் வறட்சி ஏற்படுகிறது. நமது உடலில் வாயு அதிகரிக்கும். இது பலவிதமான வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.

दिवःस्वप्न - காலை தூக்கம் - Day Sleep 
- உடலில் நெய்பு தன்மையை அதிகரிக்கும்.
- கபம் அதிகரிக்கும்.
- ஆகையால் பலவித கப ரோகங்கள் அதிகமாகும்.

‣ முறையான தூக்கம் இல்லையெனில், மயக்கம், குழப்பம், ஜுரம், உடல் வலி, மூக்கினுள் சதை வளர்தல், தலைவலி, தளர்ச்சி, சோர்வு, ஜீரண கோளாறுகள் போன்றவை உண்டாகும்.

‣ வெயில் காலத்தில் காலை தூக்கம் அவசியம்.

‣ குளிர் காலத்தில் காலை தூக்கம் கூடாது.

‣ இரவு எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோமோ அதில் பாதி அளவு நேரம் காலையில் உறங்கினால் உடல் தனக்கு தானே சரி செய்து கொள்ளும்.
நன்றாக உறங்க படுக்கைகளும், உறங்கும் அறையும் வசதியாக இருத்தல் அவசியம்.

‣ உறங்கும் முன்பு நன்றாக கை, கால், உடல் சுத்தம் செய்து எளிமையான, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடிய உடையினை உடுத்துதல் அவசியம்.

‣ படுக்கையில் உட்கார்ந்தவுடன் இறைவனை வணங்கி இடது புறமாக சயனித்து உறங்குதல் அவசியம்.

‣ இவ்வாறு மன அமைதியுடன் படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

 ब्रह्मचर्य: / ब्रह्मचर्य: - புணர்ச்சி / புணர்ச்சியின்மை - Celibacy 

‣ புணர்தல், புணர்ச்சியின்மை இரண்டினாலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
‣ எல்லாம் நம் மனதினை பொறுத்தது. மனோதிடம், தெளிவு இருந்தால் சிறந்தது. எதையும் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் தீமையே விளைவிக்கும்.
‣ ஆகையால் இந்திரியங்களை அடக்கி வாழ்ந்தால் நன்மை பயக்கும்.

மேலும் சந்தேகங்களுக்கு,
Dr. C. Bala thripurasundari, B.A,M.S.,
Ayurvedic Consultant
Chennai.
Mobile : 98415 82688

Post a Comment

0 Comments