மறந்ததும், ஒதுக்கப்பட்டதும் - பழக்க வழக்கங்கள்

இன்று எல்லாரும் பயந்து கொண்டிருக்கும் Corona Virus ஏன் நம் நாட்டில் குறைந்த அளவே பாதிக்கின்றது?

அடிப்படையில் நாம் பேணும் சுத்தம் தான் காரணம். நமது இந்திய கலாச்சாரத்தில் முன்பு இருந்த பழக்கங்கள் காலப்போக்கில் ஒதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டதின் விளைவே நாம் எதிர்கொள்ளும் இம்மாதிரியான தொற்று நோய்கள் பரவ காரணமாகின்றது.

முன்பு இருந்த பழக்கங்கள் :

1. வீட்டு வாசலில் மாட்டு சாணம் தெளிப்பது

மாட்டு சாணம் கொண்டு தான் நாம் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வர். வாரம் ஒருமுறையேனும் வீடு முழுவதும் சாணமிட்டு மொழுகுவர். மாட்டின் சாணம் இயற்கையிலேயே ஒரு கிருமி நாசினி. (Anti - bacterial, Anti - Viral and Anti - Fungal)
srustidesign - Cleaning the floor with cowdung

2. மஞ்சள் தண்ணீர் தெளிப்பது

மஞ்சளும் மிகப்பெரிய கிருமி நாசினியாகும். வீட்டில் என்ன விசேஷமானாலும் சரி, அசுபம் ஆனாலும் சரி மஞ்சள் நீர் தெளிப்பர். முக்கியமாக ஊரில் யாருக்காவது குணமாகாத நோய் ஏற்பட்டால் உடனடியாக எல்லை அம்மனுக்கு காப்பு கட்டி மஞ்சளில் நனைத்த ஆடையை அணிவர். ஊர் முழுவதும் மஞ்சள் தண்ணீர் தெளித்து வேப்பிலை செருகி வைப்பர். உள்ளூர் மக்கள் வெளியே செல்ல அனுமதியில்லை. அதே போல் வெளியூர் மக்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை. இவ்வாறு செய்வதால் நோய் கட்டுக்குள் வந்து குணமடைந்து விடும்.

srustidesign - Heritage Turmeric

ஆகையால் தான் இந்நாட்களில் ஊர் கோவில்களில் திருவிழா நடக்கும். இந்நாட்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கே இவ்வழக்கத்தை வைத்து இருந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

3. புகையிடுதல் / சாம்பிராணி போடுதல் 

சிலர் தினமும் வீட்டிற்கு புகையிடுவர். சாம்பிராணியில் பல்வேறு வகையான மருந்து பொருட்கள் உள்ளதால் காற்று மாசு ஏற்படாது. காற்றினால் ஏற்படும் நோய்கள் அறவே ஒழிந்து விடும். ஆகையால் தான் செவ்வாய், வெள்ளி இருமுறையேனும் வீட்டில் சாம்பிராணி போடுவது அம்மனுக்கு நல்லது என்று கூறி செய்ய வைத்தார்கள்.
Srustidesign - Heritage

இம்மாதிரி பல்வேறு காரணங்களை கூறி எப்படியாவது செய்ய வேண்டும் என்பது தன் முதற்கண் நோக்கம்.

4. கை , கால் கழுவுதல்

முன்பெல்லாம் வாசலில் ஓர் குவளையில் தண்ணீர் வைத்து வீட்டினுள் நுழையும் முன்பே கை, கால் , வாய்,முகம் சுத்தம் செய்து கொள்வர்.

இன்று எல்லோரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இதைதான். தன்னை சுத்தம் செய்து கொள்ளாதவன் எக்காரியத்தை செய்யவும் தகுதியில்லை.

srustidesign - heritage

5. வாய் கொப்பளிப்பது

வெளியில் சென்று வந்தால் கை, கால் கழுவி வாய் கொப்பளிப்பது என்பது சுத்தப்படுத்தி கொள்வதின் முறை.

இதில் வாய்கொப்பளிப்பதின் முறையினை பற்றி சிலவற்றை காண்போம்.

அவரவர் கை முழுதும் நீர் எடுத்து வாயில் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு வைத்து கொப்பளித்தல் அவசியம்.

மல விஸர்ஜன பிறகு - 12 முறை / தடவை

மூத்திர விஸர்ஜன பிறகு - 4 முறை / தடவை

உணவிற்கு பிறகு - 16 முறை / தடவை

வெளியில் சென்று வந்த பிறகு - 8 முறை / தடவை

வாய் கொப்பளித்தல் அவசியம் .

நாமும் நம் முன்னோர்கள் பின் பற்றிய பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் நோயின்றி வாழலாம் என்பதில் ஐயமில்லை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...

மேலும் சந்தேகங்களுக்கு,
Dr. C. Bala thripurasundari, B.A,M.S.,
Ayurvedic Consultant
Chennai.
Mobile : 98415 82688

Post a Comment

0 Comments