இன்று நம்மில் பலராலும் நிராகரிக்கப்படும் ஓர் உன்னதமான இயற்கை நமக்கு அளித்த பரிசான பால் மற்றும் பால்வகைகள்.
பால் குடிப்பதையே மறந்துவிட்டோம் நமது ஆரோக்கிய உணவு முறைகளில் முதன்மையானது காலை எழுந்த உடன் நீருக்கு பின் பால் அருந்துவது.
"ஸர்பி: ஸ்நேஹயதி க்ஷீரம் ஜீவயதி"
பால் நம் உடலுக்கு உயிரூட்டும் என்பது இதன் அர்த்தம். இவ்வளவு உன்னதமான பாலின் வகைகள், பாலில் இருந்த தயாரிக்கும் பால்பொருட்களின் வகைகள் என்று பலவாறாக விரிவாக ஆயுர்வேதத்தில் எடுத்துரைத்திருக்கிறார்கள். பொதுவாக பால் என்றால் பசும்பாலையே குறிக்கும்.
அதன் குணங்கள் :
✿ இனிப்பு சுவையுடையது.
✿ குளிர்ச்சி அளிக்கும்.
✿ குளிர்ச்சி அளிக்கும்.
✿ உடலில் மேன்மையை ஏற்படுத்தும்.
✿ நெய்ப்புதன்மை உண்டாக்கும்.
✿ தெளிவை உண்டாக்கும்.
✿ பிசுப்புத்தன்மை உடையது,
✿ அமைதியை உண்டு செய்யும்.
இதெல்லாம் நம் உடலில் ஓஜஸ்ஸின் குணங்கள் .
அவ்வாறாக பால் வகைகளில் முக்கியமான மறக்கப்பட்ட ஒன்று சீம்பால்
(பீயூஷம் or colostrum). அதாவது பசுமாடு கன்று ஈன்று ஏழுநாட்கள் வரையில் அளிக்கும் பாலிற்கு சீம்பால் என்று பெயர்.
நம் முன்னோர்கள் வீட்டில் மாடு கன்று ஈன்றால் முதல் ஏழு நாள் பாலினை யாருக்கும் அளிக்காமல் தானே பயன்படுத்துவார்கள். ஏனென்றால் தனது சந்ததியினர் வீர்யமுடன் ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கே. தனது வீட்டை தாண்டி அவ்வூர் பெரியோர்கலுக்கே அளிப்பர். ஏனென்றால் ஊர் தலைவர் ஆரோக்யமுடன் இருந்தால் தான் மக்கள் எல்லோரும் நலமுடன் வாழமுடியும் என்பதின் நோக்கத்தினாலேயே இப்பழக்கம் இருந்து வந்துது . இதனாலேயே அவர்கள் எவ்வித வைத்தியமும் செய்து கொள்ளாமலே இயற்கையாகவே எல்லோரும் வீரியத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இன்று இதனை மறுபடியும் நினைவு கூர்ந்து சீம்பாலின் (Colostrum) மகத்துவம் அறிந்து பயன்பெற்று ஆரோக்கிய வாழ்வு நாடி பயணிப்போம்.
0 Comments